×

இஸ்ரேலிய ராணுவத்தின் தொடர் தாக்குதல் எதிரொலி: காசா எல்லையில் விவசாயம் கடும் பாதிப்பு..!!

காசா: இஸ்ரேலிய ராணுவத்தின் தொடர் தாக்குதலால் காசா மக்கள் மட்டுமின்றி எல்லையோரம் உள்ள இஸ்ரேலிய விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல் நாட்டின் விவசாயம், பால் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார் தொழில்களில் காசா எல்லையோர விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் காசா பகுதி விவசாய தொழிலாளர்களின் பங்களிப்பும் அதிகம். இந்நிலையில் ஹமாஸ் இயக்கத்தினரை ஒழிக்க இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் எல்லையோர விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாலஸ்தீன விவசாய தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் விளைநிலங்களில் பணிபுரிய யாரும் தயாராக இல்லை. தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை பார்த்து வந்த தொழிலாளர்களும் பதற்றத்துடன் சொந்த நாடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் வேளைக்கு ஆள் கிடைக்காமல் விவசாய பணிகள் முடங்கியுள்ளன.

இதனால் எல்லையோர விளைநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த ஆரஞ்ச், சாத்துக்குடி, திராட்சை உள்ளிட்டவை அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை காலம் முடிய சில நாட்களே உள்ள நிலையில், ராணுவ நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு இஸ்ரேல் – காசா எல்லையோர விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

The post இஸ்ரேலிய ராணுவத்தின் தொடர் தாக்குதல் எதிரொலி: காசா எல்லையில் விவசாயம் கடும் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Israeli ,Gaza border ,Gaza ,Israeli army ,Israel ,Dinakaran ,
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...